கிணற்றில் தவறி விழுந்த 70 வயது மூதாட்டி மீட்பு..!
கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை தீயணைப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள ஒரு தெருவை சேர்ந்த 70 வயது மூதாட்டி ரஞ்சிதம்.
இவர் தனது வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் தடுப்பு சுவரில் அமர்ந்து இருந்த போது எதிர்பாராத விதமாக கிணற்றுக்குள் விழுந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் துரிதமாக செயல்பட்டு மூதாட்டியை கிணற்றில் இருந்து மீட்டனர்.






