--- --:--:-- --

தாய், சேய் நல பிரிவில் மேல் கூரை இடிந்து விழுந்ததால் பதற்றம்..!

3

செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் தாய்சேய் நல பிரிவில் மேல் கூரை இடிந்து விழுந்ததால் பதற்றம் ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் அரசு தலைமை மருத்துவமனையில் தாய் சேய் நல வார்டில் சுமார் 26 படுக்கைகள் உள்ளன.

 

இதில் மேல் கூரையில் இருந்த ஒரு பகுதி இடிந்து படுக்கையில் விழுந்தது. இதில் படுக்கையில் இருந்த குழந்தையும் தாயும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த நிகழ்வால் அங்குள்ள மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

 

மேலும் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon