ஒரே முறையில் 3 கன்றுகளை ஈன்ற பசுமாடு..!
கடலூர் மாவட்டம் புவனகிரியில் பசுமாடு ஒன்று ஒரே முறையில் 3 கன்றுகளை ஈன்றது. அரசன் ராஜலட்சுமியின் பசுமாடு கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு 3 கன்றுகளை ஈன்றது. வினோத சம்பவம் குறித்து கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்துச் செல்கின்றனர்.






