--- --:--:-- --

ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய பெண்கள்..!

1

டசென்னை ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மலையாள பெண்கள் ஓணம் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடியுள்ளனர்.

 

வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் கோவில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

 

எனவே முன்னதாக வடச்சென்னை மலையாளிகள் சங்கத்தினர் ஐயப்பன் கோயில்களில் ஓணம் பண்டிகையை கொண்டாடினர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் மலையாள பெண்கள் அத்திப்பூ கோலமிட்டு வழிபட்டனர்.

 

கேரளா செண்டை மேளம் முழங்க நடனம் ஆடினர். ஓணம் விருந்து சமைப்பதற்கான உணவு பொருட்கள் அடங்கிய தொகுப்பை மலையாளிகளுக்கு வழங்கி ஓணம் பண்டிகையை வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தினர்.

Leave a Reply

Right Menu Icon