--- --:--:-- --

ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ள சிறுவன்..!

11

குழந்தைப் பருவத்திலேயே சிலர் விஞ்ஞானிகளாக உருவெடுத்து விடுவார்கள் . அந்த வரிசையில் ஒரு சிறுவன் ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். சிறுவன் தயாரித்துள்ள ஏடிஎம் இயந்திரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

நைஜீரிய நாட்டை சேர்ந்த சிறுவன்சுமார் எட்டு வயது மதிக்கத்தக்க சிறுவன் தன்னுடைய சொந்த முயற்சியில் அட்டைப்பெட்டி அளவில் ஏடிஎம் இயந்திரம் உருவாக்கியுள்ளான். அந்த இயந்திரம் வங்கிகளில் வைத்துள்ள ஏடிஎம் இயந்திரத்தை போலவே செயல்படுகிறது.

 

சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் இயந்திரம் செயல்படும் முறையை விஞ்ஞானி பார்வையாளர்களுக்கு காண்பிக்கிறார். இயந்திரத்திற்குள் வங்கியின் கார்டை போட்டவுடன் கடவுச்சொல் உள்ளிட்டவை கேட்கப்படுகிறது.

 

பின்னர் இயந்திரத்தின் பக்கவாட்டில் பேட்டரியை வைத்ததும் நைஜீரிய நாட்டின் ரூபாய் தாள் வெளியே வந்து விழுகின்றன. இளம் வயதிலேயே ஏடிஎம் இயந்திரத்தை உருவாக்கிய அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply

Right Menu Icon