வெப்ப சலனத்தின் காரணமாக இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனத்தின் காரணமாக திருவள்ளூர் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர், நீலகிரி, கோவை, சேலம் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்டவற்றில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வரும் 21ஆம் தேதி முதல் திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.






