வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளாரா கே.சி.வீரமணி..!
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறிய அமைச்சர் வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் அறப்போர் இயக்கம் சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி 2011 முதல் 2021 வரை வருமானத்திற்கு அதிகமாக வீரமணி சொத்து சேர்த்துள்ளதாக குற்றஞ்சாட்டப் பட்டது. இதனையடுத்து அவர் மீது அறப்போர் இயக்கம் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் சொத்துக்குவிப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
2015 இல் வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினரின் சொத்து மதிப்பு கூடியுள்ளதாக புகார் கொடுத்துள்ளது. வீரமணியால் வாங்கப்பட்டுள்ள அசையும் சொத்துக்களின் மதிப்பு 43 கோடியாக அதிகரித்துள்ளது. இதனையடுத்து முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க அறப்போர் இயக்கம் புகார் மனு அளித்துள்ளது.






