பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் உயிரிழப்பு..!
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 42. சிங்கப்பூர் தமிழரான இவர் சென்னையில் 10 ஆண்டுகள் தங்கியிருந்து பல்வேறு தமிழ் சேனல்களில் பணியாற்றினார்.
திருமணத்திற்கு பிறகு 2011ஆம் ஆண்டு சிங்கப்பூரில் குடியேறிய ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.






