--- --:--:-- --

நடிகை மீரா மிதுனை சென்னை அழைத்து வருவதில் சிக்கல்..!

3

ட்டியல் இன மக்களை இழிவாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா சென்னை அழைத்து வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அண்மையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

 

பட்டியலின மக்கள் குறித்து இழிவாக பேசியதாக தெரிகிறது. இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிலையில் விசாரணைக்கு ஆஜராகாத அவர் தன்னை கைது செய்ய முடியாது என மற்றொரு வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்த வீரமுடன் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர்.

 

விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருவதால் சென்னை அழைத்து வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இன்று மதியத்திற்குள் சென்னை அழைத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon