சந்தேகத்தின் பேரில் மனைவியை கொலை செய்த கணவன்..!
விருதுநகர் மாவட்டத்தில் மனைவியை கொன்று உடலை எரித்த கணவரையும், பெண் தோழியையும் போலீசார் கைது செய்தனர். நாகமுத்து ஓராண்டாக பிரிந்து வாழ்ந்த மனைவி நிர்மலாவை சேர்ந்து வாழ அழைத்து வந்துள்ளார்.
நிர்மலாவை காணவில்லை என அவரது சகோதரர் போலீசில் புகார் அளித்தார்.
நாகமுத்துவிடம் போலீசார் விசாரித்த போது நிர்மலா நீண்ட நேரம் செல்போனில் பேசியதால் நடத்தையில் சந்தேகப்பட்டு கட்டையால் அடித்து கொன்றதாகவும் பின்னர் தனது பெண் தோழியுடன் சேர்ந்து மனைவியின் உடலை வீட்டின் பின்புறம் வைத்து எரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.






