முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கு முடக்கம்..!
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் வங்கி கணக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் கூறுகின்றனர். மேலும் அவருடைய வங்கி கணக்கு முடக்கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் அவருக்கு நெருக்கமான உறவினர்கள் உள்ளிட்ட 6 பேரின் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 13 லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறையினரின் சோதனை தொடர்ந்து நேற்று நடைபெற்றது. கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் இரண்டாவது நாளாக சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் வேலுமணி உள்ளிட்டோரின் 700 கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.







