--- --:--:-- --

பெகாசஸ் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று விசாரணை..!

5

பெகாசஸ் விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய வழக்குகளை உச்ச நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

 

பெகாசஸ் மென்பொருளை கொண்டு முக்கிய பிரமுகர்களை உளவு பார்த்த குற்றச்சாட்டு தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அரசியல் கட்சியினர் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மற்றும் ரெட் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

 

இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என வழக்கறிஞர் கபில் சிபல் சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

 

முக்கிய பிரமுகர்களின் தொலைபேசிகள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதோடு தனிநபர் உரிமையை மீது நடத்தப்படும் தாக்குதல் பார்க்க வேண்டி இருப்பதாகவும் கபில்சிபல் குறிப்பிட்டிருந்தார்.

 

இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதனை உயர்நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

Leave a Reply

Right Menu Icon