--- --:--:-- --

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மோசம்..!

10

திமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல்நிலை மோசமடைந்து வருவதால் அந்த கட்சியின் ஆலோசனை கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

அதிமுகவின் அவை தலைவர் மதுசூதனன் மூச்சுத் திணறல் காரணமாக கடந்த மாதம் 18ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon