பீர் பாட்டிலால் இளைஞரின் முகத்தில் அடித்த நபர்..!
கள்ளக்குறிச்சி அருகே கடையிலிருந்து வாங்கி சென்ற பீர் பாட்டில்கள் யாருடையது என இருவருக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் பீர் பாட்டிலால் மற்றொரு இளைஞரை தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
புதூரைச் சேர்ந்த ராஜா என்பவர் நேற்று மது அருந்துவதற்காக அருகேயுள்ள மது கடைக்கு சென்றபோது அங்கு வந்த கட்டிட பொறியாளர் கோகுல் ஏற்கனவே மது போதையில் இருந்த நிலையில் இருவரும் பீர் பாட்டில்களை வாங்கி வந்து சென்றுள்ளனர்.
அப்போது கையில் வைத்திருந்த பீர் பாட்டில் யாருடையது என்ற குழப்பத்தில் சாலை நடுவே வைத்து தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் ராஜா கையில் வைத்திருந்த ஒரு பீர் பாட்டிலை தரையில் போட்டு உடைத்துவிட கோகுல் தன் கையில் வைத்திருந்த பீர் பாட்டிலை ராஜாவின் முகத்தில் ஓங்கி அடித்ததில் அவர் சுருண்டு கீழே விழுந்தார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து ராஜாவே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.






