--- --:--:-- --

வெள்ளப்பெருக்கு நடுவே ஆய்வுக்கு சென்ற அமைச்சர்..!

6

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு நடுவே தற்காலிகமாக அமைக்கப்பட்ட பாலத்தின் கயிறை பிடித்துக்கொண்டு கடந்து அந்த மாநில பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொள்ள சென்றுள்ளார். ஹிமாச்சல பிரதேசத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக ஊரே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

 

இந்த நிலையில் லகால்ஸ்பேட் பகுதியில் நீரின் அளவு அதிகரித்து அங்கு அமைக்கப்பட்டிருந்த பாலம் உடைந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆய்வு மேற்கொள்ள சென்ற பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராம்லால் தற்காலிக பாலத்தை உபயோகித்து ஆற்றைக் கடந்தார்.

 

கயிற்றை பிடித்து பாலத்தை கடந்து ஆய்வு மேற்கொண்டுள்ளவரின் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon