பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ஆம் வெளியாகிறது..!
பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் ஆகஸ்ட் 3ஆம் நாள் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான பிசாசு திரைப்படம் தமிழ் திரைப்பட ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
காதல் தோல்வியால் பழிவாங்க வரும் பேய் கதைகளுக்கு நடுவே இறக்கும் தருவாயில் இளம் பெண்ணின் காதலை திகிலூட்டும் ஒரு பேய் கதையாக வடிவமைத்திருந்தார் மிஷ்கின்.
தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிசாசு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டராய் ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.






