கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!
கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 4 நாட்களுக்கு கோவை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, தென்காசி மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அடுத்த இரண்டு நாட்களாக மீனவர்கள் மன்னார் வளைகுடா, தெற்கு வங்கக்கடல், மேற்கே அரபிக் கடல் பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.






