ராமாயணத்தில் ராமனாக நடிப்பதற்கு மகேஷ்பாபு மறுப்பு..!
ஹிந்தியில் தயாராகிவரும் ராமாயணத்தில் ராமனாக நடிப்பதற்கு மகேஷ்பாபு மறுப்பு தெரிவித்துள்ளார். டங்கல் படத்தை இயக்கிய நிதிஷ் திவாரி இயக்கும் புதிய படத்தில் சீதையாக தீபிகா படுகோன் ராவணனாக ரித்திக் ரோஷன் நடிக்கின்றனர். ராமனாக நடிக்க நடிகர் மகேஷ் பாபுவிடம் கேட்டபோது அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ் பாபு தனக்கென கொள்கைகளை கொண்டவர். பிற மொழிப்படங்கள் மற்றும் ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பது அதில் முக்கியமானது. அதன் காரணமாகவே இந்த படத்தில் நடிக்க வருவதாக கூறப்படுகிறது.
தனக்கு மிகவும் பிடித்த விஜய் துப்பாக்கி படத்தின் ரீமேக்கில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் மகேஷ்பாபு நடிக்காதது குறிப்பிடத்தக்கது.






