டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி..!
திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கின்றனர். இந்த சந்திப்பு தமிழக அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
தமிழகத்தில் ஆட்சியை இழந்த அதிமுகவில் சலசலப்புகளுக்கு பஞ்சமில்லை. இரட்டைத்தலைமை விவகாரம், அதிமுகவுடன் சசிகலா பேச்சு, தேர்தல் தோல்விக்கு யார் காரணம், உள் கட்சி தேர்தல் எப்போது என்பது உள்ளிட்ட பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன.
இந்த சூழலில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிபழனிசாமி தனித்தனியே திடீரென டெல்லி புறப்பட்டு சென்றனர். முதலில் டெல்லி சென்ற ஓ பன்னீர்செல்வம், மத்திய இணையமைச்சர் எல் முருகனை சந்தித்து பேசியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடியை இன்று காலை அவர் சந்திக்க இருக்கிறார்.
இதேபோல் எடப்பாடி பழனிசாமி பிரதமரை சந்திக்க உள்ளார். அப்போது தமிழகத்தின் அரசியல் சூழ்நிலை, உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து விவாதிப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
அண்மையில் மாற்றியமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் அதிமுகவிற்கு இடமளிக்காது பற்றி பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சருடன் பேசுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.






