நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்வேன்..!
தாம் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் நடிகை வனிதா தெரிவித்த நிலையில் அவர் இரும்பு மனிதர் என நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் புகழாரம் சூட்டினார்.
இருவரும் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் தாம் அரசியலுக்கு வருவேன் என தம்முடைய ஜோசியக்காரர் தெரிவித்தார் என்றும் ஆனால் தனக்கு விருப்பமில்லை என்றும் கூறினார்.
தொடர்ந்து பேசிய நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் வனிதா பல அவமானங்களையும் துன்பங்களையும் கடந்து வந்த இரும்பு மனிதர் என்றார்.







