கொரொனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள தயார்..!
கொரொனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள ஆக்சிசன் கட்டமைப்புகள் பெரிய மருத்துவமனைகளில் தயார் நிலையில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கேகே நகர் அரசு மருத்துவமனையில் கவச உடை அணிந்துகொண்டு நோயாளிகளிடம் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரண்டாயிரத்துக்கும் கொண்டுவரப்படும் என கூறினார். அதை தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.






