--- --:--:-- --

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது..!

3

மிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை பதினோரு மணிக்கு வெளியிடப்படுகிறது.

 

பள்ளி மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

 

மாணவர்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

 

பள்ளி மாணவர்கள் வரும் 22ஆம் தேதி காலை 11 மணி முதல் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவிட்டு இணையதளங்களில் பதிவு செய்து தங்களுக்கான மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon