தம்பதியினரை கொலை செய்த வழக்கில் 3 இளைஞர்கள் கைது..!
தர்மபுரியில் தம்பதியினரை கொலை செய்த வழக்கில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஒருவர் உட்பட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கிராமத்தில் 12ஆம் நாள் கிருஷ்ணய்யர் மற்றும் அவரது மனைவி சுலோச்சனா ஆகிய இருவரும் வீட்டின் அருகே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். இதனிடையே சந்தேகத்தின் பெயரில் அதே கிராமத்தை சேர்ந்த மூன்று இளைஞர்களை கைது செய்தனர்.
அதேநேரம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் வீட்டில் புகுந்து கொள்ளை அடித்ததாகவும் இருவரையும் வீட்டின் பின்பக்கம் தூக்கி சென்று கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும் அவர்களுக்கு உதவியாக இருந்த அதிமுக தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த வேலவன் அவர்களது நண்பர்கள் 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.





