--- --:--:-- --

சிவசங்கர் பாபாவை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு..!

11

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேளம்பாக்கம் பள்ளியின் தாளாளர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்துள்ளனர் இதனையடுத்து அவர் மீது போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

 

டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்ட அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை எட்டு முன்னாள் மாணவிகள் புகார் அளித்திருக்கும் நிலையில் இவர் மீது 3 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

 

இதில் ஒரு வழக்கில் மட்டும் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டிருந்தார். தற்போது இரண்டாவது வழக்கில் சென்னை சிபிசிஐடி காவலர்கள் அவரை கைது செய்து இருக்கிறார்கள். எனவே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

 

அப்போது அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon