--- --:--:-- --

விவசாயம் செய்யுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதால் மாணவன் தற்கொலை..!

3

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே விவசாயம் செய்யுமாறு பெற்றோர் அறிவுறுத்தியதால் மனமுடைந்த மகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கோவில்பத்து மாதா கோவில் பகுதியை சேர்ந்தவர் வீரையன். பருத்தி விவசாயம் செய்து வரும் இவருக்கு 23 வயதில் சுரேஷ்குமார் என்ற மகனும் இருக்கிறார். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சுரேஷ் கொரொனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் படித்து வந்துள்ளார்.

 

பெற்றோர் வீட்டில் சும்மா தானே இருக்கிறாய் வந்து வேலை செய்ய வேண்டியது தானே என சொல்லியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சுரேஷ்குமார் தற்கொலை செய்துள்ளார். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

சடலத்தை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல முறையான வழி இல்லாததால் ஆற்றில் இறங்கி உறவினர்கள் கொண்டு செல்லும் நிலையும் அரங்கேறியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon