--- --:--:-- --

கொரோனாவுக்கு வாய்வழி மருந்து உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி..!

5

கொரோனாவுக்கு வாய்வழி மருந்து உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், வாய் வழியாக பயன்படுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்குவது குறித்து ஆராய்ச்சி செய்ய கொல்கத்தாவில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம், தேசிய காலரா நோய்கள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

 

இது தொடர்பாக ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரி தொழில்நுட்பத் துறையின் திட்ட அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.

 

இது குறித்து பேசிய அவர் தேசிய காலரா நோய் நிறுவனத்தின் இயக்குனர் சாந்தாராம் ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் எனவும் இதற்கு ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கி பணி தொடங்கும் எனவும் மற்ற தடுப்பு மருந்துகளை போலவே பல ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை நடத்தப்படும் என குறிப்பிட்டார்.

 

இந்த மருந்து முதலில் விலங்குகளிடம் சோதனை நடத்தப்படும் எனவும் எல்லா பணிகளையும் முடிக்க ஐந்து அல்லது ஆறு ஆண்டுகள் ஆகி விடும் எனவும் அதற்குப் பின்னால் மருந்து சந்தைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon