தமிழகத்தில் இன்று முதல் ஒரே மாதிரியான தளர்வுகள் அமல்..!
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கூடுதல் தளர்வுகள் இன்று காலை முதல் அமலுக்கு வருகின்றன இந்த முறை தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.
மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தளர்வுகள் வழங்கப்பட்டு வந்த சூழலில் கொரொனா தொற்று குறைந்து இருப்பதை கவனத்தில் கொண்டு தற்போது ஒரேமாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.
அதன்படி தமிழ்நாடு முழுவதும் உணவகங்கள் தேநீர் விடுதிகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதிக்கப்படுவர். இரவு 7 மணி வரை செயல்பட்டு வந்த கடைகள் அனைத்தும் இரவு 8 மணி வரை இயங்கலாம்.
27 மாவட்டங்களிலும் மட்டும் பேருந்து சேவை, மீதம் உள்ள 11 மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளும், மாவட்டங்கள் இடையையும் இ பதிவு முறை ரத்தாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதி தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் துணிக்கடைகள், நகைக்கடைகள் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்பட அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே நேரத்தில் தியேட்டர்கள் மதுபானக்கடைகளை திறக்கும் அரசியல் கூட்டங்களை நடத்தவும் விதிக்கப்பட்ட தடை நீடிக்கிறது.






