ஆண்டு முழுதும் நீடிக்கும் நோயாக கொரொனா மாறலாம்..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


கொரொனா தொற்று தொடர்ந்து குறைந்து வந்தாலும் வைரஸின் மரபணு மாற்றங்களால் எதிர்காலத்தில் அது ஆண்டு முழுவதும் காணப்படும் ஒரு நோயாக மாறி விடும் என சில மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்.

 

டெல்லி அரசு மருத்துவமனை மருத்துவ இயக்குனர் சுரேஷ் குமார் இதுபற்றி கூறுகையில் டெல்லியில் இருந்து ஒருபோதும் கொரொனா 100% ஒழியாது என்றும் ஆண்டு முழுவதும் சில நோயாளிகள் இருந்துகொண்டே இருப்பார்கள் என்றும் தெரிவித்தார்.

 

கொரொனா டி‌ஆர்‌என்‌ஏ அடிப்படையிலான வைரஸ் என்பதால் தொடர்ந்து வாழ்வதற்கான தனது வடிவத்தை அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும் என்பதால் அது ஒரு நீங்காத நோயாக நீடிக்கலாம் என கூறப்படுகிறது.


Leave a Reply