நயன்தாரா – விக்னேஷ்சிவன் திருமணம் எப்போது..? விக்னேஷ்சிவன் கூறியதென்ன..?
நயன்தாராவை திருமணம் செய்துகொள்ள பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதாக இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். அவர் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. அவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே நட்பு உருவானது.
பின் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக வலம் வருகின்றனர். இந்த நிலையில் சமூக வலைதளம் உரையாடலில் நயன்தாரா உடனான திருமணம் குறித்து ரசிகர் ஒருவர் விக்னேஷ் சிவனிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு திருமணம் மற்றும் அது சார்ந்த நிகழ்வுகளுக்கு நிறைய பணம் தேவைப்படும் என்பதால் அதனை சேர்த்து வருவதாகவும் அதற்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.






