வகை 2 இல் உள்ள 23 மாவட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள கூடுதல் தளர்வுகள்..!
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் வகை 2 யில் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் தொற்று பரவலின் அடிப்படையில் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ள தமிழக மாவட்டங்களில் அரியலூர், கடலூர், தருமபுரி, கன்னியாகுமரியில், ராணிப்பேட்டை, திருச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 23 மாவட்டங்கள் உள்ளன .
இந்த 23 மாவட்டங்களுக்கும், உள்ளூர் மாவட்டங்களுக்கு இடையேயும் வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 50 விழுக்காடு பயணிகளோடு பொதுப் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் காலை 5 மணி முதல் 9 மணி வரை நடை பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்கள் 50 பணியாளர்களுடன் செயல்படலாம் என்று மின்னணு சாதனங்கள் மற்றும் அவை சார்ந்த உதிரிபாகங்கள் செல்பேசி மற்றும் அவை சார்ந்த பொருட்களை விற்கும் கடைகள் ஆகியன காலை 9 முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பாத்திரக் கடைகள் , பேன்ஸி கடைகள், அழகுசாதனப் விற்பனையகங்கள், புகைப்படம் மற்றும் வீடியோக்கள் கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவு கடைகளில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவை எடுத்து செல்ல அரசு அனுமதித்துள்ளது.






