டெல்டா வைரஸ் தொற்று பரவல் இரண்டு வாரத்தில் இரட்டிப்பு..!
அமெரிக்காவில் டெல்டா வைரஸ் தொற்று பரவல் இரண்டு வாரத்தில் இரட்டிப்பாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய வெள்ளை மாளிகையின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் ஆண்டனி சீனாவில் இருந்து தோன்றிய கொரொனா வைரஸ் தொடர்ந்து உருமாறி வருகிறது.
அந்த வகையில் இந்தியாவிலும் புதிய வகை மாறுபாடு கண்டறியப்பட்டது. இதற்கு டெல்டா என பெயரிடப்பட்டு இருக்கிறது. இது பல நாடுகளில் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்த டெல்டா அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்படுபவர்கள் 20 விழுக்காடு பேருக்கு இந்த வகை தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த வகை வைரஸ் அதிக வீரியம் உடையதாகவும் வேகமாக பரவும் தன்மையுடனும் உள்ளது எனவும் பாதிப்பு ஏற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட வேண்டிய அளவுக்கு தீவிரம் உள்ளது எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.






