--- --:--:-- --

மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய புகாரில் ஆசிரியர் ஹபீப் முகமது சஸ்பெண்ட்..!

3

ராமநாதபுரத்தில் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசிய புகாரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் ஹபீப் முகம்மது சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர் மாணவிகளின் தொலைபேசி எண்களை பெற்று பின்னர் தனிப்பட்ட முறையில் பேசியுள்ளார்.

 

அப்போது பள்ளி மாணவிகளை தனது வீட்டிற்கு வருமாறு செல்போன் மூலம் அழைத்ததாக பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

 

வீட்டிற்கு வர மறுத்தால் மதிப்பெண்ணை குறைத்து தேர்ச்சி பெற விடாமல் செய்வதாக மிரட்டியதாகவும் பாலியல் ரீதியாக தொல்லை அளித்ததாகவும் ஆசிரியர்கள் மீதான புகாரில் குறிப்பிட்டுள்ளனர். ஆசிரியர் ஆபாசமாக பேசிய செல்போன் உரையாடல் ஆதாரத்துடன் பாதிக்கப்பட்ட மாணவி புகாரில் கூறியுள்ளார்.

 

அதன் பேரில் காவல் துறை பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் அமைப்பினரும் நடத்திய விசாரணையில் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது செய்தனர். இந்நிலையில் ஆசிரியரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Right Menu Icon