செப்டம்பர் மாதம் முதல் 2வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரொனா தடுப்பூசி..!
செப்டம்பர் மாதம் முதல் 2வயதுக்கு மேற்பட்டோருக்கும் கொரொனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கும் என்று மருத்துவமனை இயக்குனர் தெரிவித்துள்ளார். மூன்றாவது அலை குறித்த கணிப்புகள் குழந்தைகள் மீதான பாதிப்பு குறித்து அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இதனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு துரிதப்படுத்தி வருகிறது. கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன .
இந்தியாவில் பைசர் தடுப்பூசிக்கு விரைவில் ஒப்புதல் கிடைக்க உள்ள நிலையில் அந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தக் கூடியதாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.






