நாட்டின் முதன்முதலாக பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட நபர்..!
நாட்டின் முதன்முதலாக 34 வயதுடைய நபர் ஒருவர் பச்சை பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாவது அளவில் தீவிர பாதிப்புகள் ஏற்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட தொடங்கியது.
இதன் தொடர்ச்சியாக ஒரு சிலருக்கு வெள்ளை பூஞ்சை நோயும் பின்னர் மஞ்சள் பூஜை நோயும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் இந்தோ நகரில் அரபிந்தோ மருத்துவமனையில் கடந்த ஒன்றரை மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த 34 வயதுடைய நபர் ஒருவருக்கு பச்சை பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அவரது நுரையீரல் பாதிப்பிற்கு நடந்த சோதனையின் போது இந்த நோய் தாக்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவரை மும்பை நகருக்கு சிகிச்சைக்காக விமானத்தில் அழைத்து சென்றுள்ளனர்.







