--- --:--:-- --

கடன் தொல்லையால் செம்பரம்பாக்கம் ஏரியில் குதித்து பெண் தற்கொலை

fgfd

செம்பரம்பாக்கம் ஏரியின் இரண்டாவது மதகு அருகே பெண் ஒருவர் இறந்த நிலையில் இருப்பதாக குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 

இதையடுத்து குன்றத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூந்தமல்லி தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் பூந்தமல்லி தீயணைப்பு போலீசார் ஏரியில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இறந்து போன பெண் யார் என்பது குறித்து சப் இன்ஸ்பெக்டர் அந்தோனி சகாய பரத் விசாரணை மேற்கொண்டார்.

 

விசாரணையில், இறந்து கிடந்தது மதுரவாயல் அடுத்த வானகரம், ஜெயரம் நகர் பகுதியைச் சேர்ந்த ராதா(33), என்பதும் இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். மேலும் கடன் வாங்கி வீடும் கட்டி வந்ததாக கூறப்படுகிறது. தற்போது ஊரடங்கு காலத்தில் சீட்டு போட்டவர்களுக்கு பணத்தை கொடுக்க முடியாமலும், வீட்டையும் கட்ட முடியாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் இதன் காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டு வருவதாக தனது கணவரிடம் ராதா கூறி விட்டு வந்தவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் தொடர்ந்து தற்கொலைக்கு வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Right Menu Icon