இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு புலிட்சர் விருது..!
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பத்திரிக்கையாளருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதான புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மேகா ராஜகோபாலன் என்ற பத்திரிக்கையாளர் சர்வதேச செய்தியாளர் புலிட்சர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். நியூசில் பணியாற்றி வரும் இவர் 2017ஆம் ஆண்டு சீனாவில் இஸ்லாமியர்கள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை உலகிற்கு அம்பலப்படுத்தினார்.
அதற்காகவே இவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. புலிட்சர் விருது அறிவிப்பை இலண்டனிலிருந்து நேரில் பார்த்துக் கொண்டிருந்த மேகா தனக்கு இந்த விருதுகிடைக்கும் என சற்றும் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.







