--- --:--:-- --

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் இன்று முதல்வர் நேரில் ஆய்வு செய்கிறார்..!

1

திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு செய்கிறார். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கடை மடை வரை முழுமையாக சென்று சேரும் வகையில் 60 கோடி ரூபாய் செலவில் தூர்வாரப்படும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானத்தில் இன்று திருச்சி செல்கிறார். அங்கிருந்து காரில் கல்லணை கால்வாய் பகுதிக்கு சென்று தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.

 

பின்னர் தஞ்சை மாவட்டத்தில் கொடுங்கால், வாய்க்காலில் நடைபெறும் பணிகளை பார்வையிடுகிறார். திருச்சியிலிருந்து சேலம் செல்லும் முதலமைச்சர் அங்கு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு அதனை தொடர்ந்து நாளை காலை மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுகிறார்.

Leave a Reply

Right Menu Icon