--- --:--:-- --

தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும்..!

13

வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்கள் அதனை ஒட்டிய ஒரு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

 

சென்னையின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மாவட்டங்கள் கன்னியாகுமரி, புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு, கொத்தமங்கலம், மாங்காடு, கீரமங்கலம் சேர்ந்த குடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி தேவகோட்டை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon