--- --:--:-- --

நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரியும் சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சம்..!

10-

ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் நள்ளிரவில் சாலையில் சுற்றித்திரியும் சிறுத்தையின் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

 

திம்பம் மலைப்பாதையில் 24வது கொண்டை ஊசி வளைவு அருகே சாலையோர தடுப்பு சுவற்றில் கம்பீரமாக படுத்திருந்த சிறுத்தையை அவ்வழியாக காரில் சென்று இரண்டு பேர் வீடியோ எடுத்துள்ளனர்.

 

காரின் முகப்பு வெளிச்சம் தன் மீது படுவது தெரிந்தும் சிறுத்தை அசையாமல் போஸ் கொடுத்து படுத்திருந்தது. வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் திம்பம் மலைப்பாதை வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனத்தை விட்டு கீழே இறங்க வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon