--- --:--:-- --

சிக்கனுக்கு பதிலாக டவலை பொரித்து அனுப்பிய உணவகம்

9

உணவகத்தில் வறுத்த சிக்கன் ஆர்டர் செய்ததற்கு டவல் கிடைத்த சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் அரங்கேறியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரில் வசித்த ஒரு பெண் தனது மகனுக்காக அங்கு பிரபலமாக உள்ள உணவகத்தில் ஜாய் சிக்கன் என அழைக்கப்படும் ஒரு பொறித்த சிக்கனை ஆர்டர் செய்தார்.

 

உணவு டோர் டெலிவரி செய்யப்பட்டதும் மகனிடம் சிக்கனை சாப்பிட கொடுத்துள்ளார். ஆனால் அது கடிப்பதற்கு சிரமமாக இருந்ததது. இதனால் அவர் கத்தியால் வெட்ட முயன்றபோது அது கடினமாக இருந்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர் அதனை பிரித்து பார்த்தபோது சிக்கனுக்கு பதிலாக துடைக்க பயன்படும் டவலை பொரித்து பார்சலில் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் தனது மோசமான அனுபவத்தை புகைப்படமாகவும் வீடியோவாகவும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலானது.

 

சிக்கனுக்கு பதிலாக டவல் பொரித்து வழங்கப்பட்ட நிகழ்வை 87 ஆயிரம் பேர் 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். அவர்களால் நிறுவனம் தற்காலிகமாக மூடி விட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon