புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் ஆன்லைன் வகுப்புகள் தொடக்கம்..!
புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடன் தனியார் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக மாணவ மாணவிகளிடம் இருந்து தொடர் புகார்கள் எழுந்தன. பள்ளிக்கல்வித்துறை சார்பில் வகுப்புகளுக்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.
அதை பின்பற்றி வகுப்புகள் தொடங்கின. வகுப்புகளில் பங்கு பெறும் மாணவர்கள் சீருடை அணிந்த உடன் பங்கேற்கவும் ஆசிரியர்கள் வகுப்புகளில் இருப்பது போன்ற உடைகள் அணிந்திருக்க வேண்டும் என்று வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்களின் பின் புற சூழலில் குடும்பத்தை சேர்ந்த மற்றும் நபர்களின் நடமாட்டம் இருக்க கூடாது என்று நடை முறைகள் பின்பற்றப்பட்டன.
இதைப்போல மாணவர்களின் பெயரில் அவர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டுமெனவும், வகுப்பு முடியும் வரை வீடியோவில் முழுமையாக இடம் பெற வேண்டும் என்றும், வேறு எங்கும் செல்லக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு பாடல்களையும் 30 முதல் 45 நிமிடங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.






