திடீரென நடுவானில் குலுங்கிய விமானம்..!
கொல்கத்தா நோக்கி சென்ற பயணிகள் விமானம் தரையிறங்கும் போது குலுங்கியது 8 பேர் காயமடைந்துள்ளனர். விஸ்தாரா விமான நிறுவனத்தின் யுகே 775 என்ற விமானம் தரையிறங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாக குலுங்கியதால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த 8 பேருக்கு காயங்கள் ஏற்பட்டது. அவர்களில் 3 பேர் பலத்த காயம் அடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.






