அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் பேஸ்புக் கணக்கு 2 ஆண்டுகளுக்கு முடக்கம்..!
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை ஏற்றுக் கொள்ளாததால் தனது ஆதரவாளர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் டிரம்ப் பேசியுள்ளார். மேலும் தனது பேச்சை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
அவரது பேச்சால் தூண்டப்பட்ட ஆதரவாளர்கள் கேப்பிட்டல் கட்டடத்தில் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திறம்பின் ட்விட்டர் கணக்கை அந்த நிறுவனம் நிரந்தரமாக தடை செய்துள்ளது. ஆனால் ஃபேஸ்புக் கணக்கை நிரந்தரமாக மூடாமல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் ஃபேஸ்புக் பக்க கணக்கு இரண்டாண்டுகளுக்கு முடக்கப்படுவதாக ஃபேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதனால்தான் ஃபேஸ்புக் பக்கம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்கள் பாதுகாப்பிற்கு எந்த பிரச்சினைகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னரே மீண்டும் டிரம்பின் ஃபேஸ்புக் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




