--- --:--:-- --

ஆய்வாளர் திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்..!

5

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் தகாத வார்த்தையால் திட்டியதாக பெண் காவலர் தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

திருப்போரூர் காவல் நிலையத்தில் பெண் காவலரின் பெற்றோருக்கு கொரொனா உறுதியானதால் அவர்களைக் கவனித்துக்கொள்ள விடுமுறை எடுத்து சொந்த ஊரான ராணிப்பேட்டை சென்றிருக்கிறார். அங்கு பெற்றோருடன் தாங்க முடியாததால் மன உளைச்சல் அடைந்த கஜலட்சுமி மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

 

இந்த நிலையில் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளர் கஜலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியதனால் மனவேதனை அடைந்த அவர் தங்கும் விடுதியில் பூச்சிமருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் இருந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon