--- --:--:-- --

தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை..!

3

மிழகத்தில் பெருந்தொற்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

 

தமிழகத்தில் பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது.

 

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு நாளை மறுநாள் காலை 6 மணிக்கு நிறைவடையவுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்க மருத்துவர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று வெளியிடவுள்ளார்.

 

அதன்படி பல மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தொடரும் எனவும், குறைவான பாதிப்புள்ள மாவட்டங்களுக்கு ஊரடங்கு அறிவிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon