--- --:--:-- --

தமிழகத்தில் கொரொனா தடுப்பூசி உற்பத்தி செய்ய தமிழக அரசு தீவிர முயற்சி..!

13

மிழகத்தில் கொரொனா தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை தொடங்குவது குறித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இந்த ஆலோசனை நடைபெற்று உள்ளது.

 

தடுப்பூசி உற்பத்திக்கான கட்டமைப்பு, மூலப்பொருட்கள், நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. தலைமை செயலர், நிறுவனர், மேலாண் இயக்குனர் உள்ளிட்டோர் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

 

தடுப்பூசியை தயாரிக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது, செங்கல்பட்டில் உள்ள மையத்தில் தடுப்பூசி உற்பத்தி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon