--- --:--:-- --

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு..!

12

மிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் 1ம் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்து இருந்தது.

 

ஆனால் இரண்டு நாட்கள் தாமதமாக கேரளாவின் தெற்கு பகுதியில் இன்று தென்மேற்கு பருவ மழை பொழியத் தொடங்கியது. கேரளா லட்சத்தீவில் வரும் 5ஆம் தேதி வரை பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இதனிடையே தமிழகத்தில் மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

வரும் 5ஆம் தேதி டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon