சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அனுமதி..!
சீனாவில் தயாரிக்கப்பட்ட சினோஃபார்ம், சினோவாக் ஆகிய 2 தடுப்பூசி மருந்துகளுக்கு விரைவில் அனுமதி அளிக்கப்படும் என கடந்த மாதம் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது.
அதன்படி அவசரகால பயன்பாட்டிற்கு சினோவாக் தடுப்பூசியை பயன்படுத்த உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தடுப்பூசி இந்தஅமைப்பின் ஒப்புதல் பெறும் சீனாவின் இரண்டாவது தடுப்பூசியாகும்.
கடந்த மாதம் சினோஃபார்ம் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது. சினோவாக் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதன் மூலம் உலக நாடுகளுக்கு தடுப்பூசிகளுக்கு விரைவாக ஒப்புதல் அளிக்கவும், இறக்குமதி செய்து விநியோக்கவும் கூடுதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.






