--- --:--:-- --

கருணாநிதி பிறந்தநாளான இன்று 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் இன்று தொடக்கம்..!

3

கொரொனா நிவாரண நிதியின் இரண்டாம் தவணை மற்றும் குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மறந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 98வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

 

இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தியுள்ளார். பின்னர் கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்று மரியாதை செலுத்த உள்ளார்.

 

இதைதொடர்ந்து தலைமை செயலகம் செல்லும் முதலமைச்சர் அங்கு 11 மணி அளவில் மரக்கன்றுகள் நடும் விழாவை தொடக்கி வைக்கிறார். கொரொனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் திட்டம் ஆகியவற்றையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.

 

அதேபோல் ஊதியமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு நான்காயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி மளிகை பொருட்கள் வழங்கும் திட்டமும் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.

 

மேலும் கொரொனா தொற்றால் உயிரிழந்த பத்திரிக்கையாளர் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் மருத்துவர், மருத்துவ பணியாளர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் வழங்குவது உள்ளிட்ட திட்டங்களையும் முதல்வர் தொடக்கி வைக்கிறார்.]

Leave a Reply

Right Menu Icon