--- --:--:-- --

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் முன்ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு..!

9

பாலியல் வழக்கில் முன்ஜாமீன் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றியதாக துணை நடிகை ஒருவர் மணிகண்டன் மீது புகார் அளித்திருந்தார்.

 

கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்ததாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனடிப்படையில் மணிகண்டன் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

அவருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. இது அவரது சொந்த ஊரான ராமநாதபுரத்தில் விரைந்த காவல்துறையினர் அவரது உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

மணிகண்டன் சென்னையில் பதுங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது நெருங்கிய நண்பர்களின் பட்டியலையும் காவல்துறை சேகரிக்கிறது.

Leave a Reply

Right Menu Icon